Blog Archive

Wednesday, July 18, 2007

கொழுப்பில்லாத கூட்டு

இங்கே இருக்கும் பல குடும்பங்களில் அவரவர் பாரம்பரியங்களை விடாமல் பின்பற்றிவரும் பெண்களும் இருக்கிறார்கள்।
அவர்களில் ஒரு பெண் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவள்। அவளும் கணவரும் குழந்தைகளுமாக ஸ்விட்சர்லாண்டில் கிட்டத்தட்ட 12வருடங்களாக இருந்து வருகிறார்கள்।



இரு மகன்களும் ஆங்கிலப்பள்ளியில் படிக்க,இந்த அம்மா பொழுதுபோவதற்காக நம் ஊர் சமையல் முறை வகுப்புகள் ஆரம்பித்து

நடத்தி வருகிறார்கள்।



அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட குறிப்பு கீழே தருகிறேன்।

இது தால்,சப்ஜி,கூட்டு வகை.



இது சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளவோ, இல்லை அப்படியே சாப்பிடவோ,

சாதமுடன் கலந்து சாப்பிடவோ இசைவாக இருக்கிறது।



உப்பும் காரமும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி சேர்க்கவும்।



தேவையான பொருட்கள்।



१, பயத்தம்பருப்பு....200கிராம்



२ சேர்க்கக்கூடிய காய்கறிகள்

ஸூக்கினி,

முட்டைக்கோஸ்,

சௌ சௌ

தக்காளி

பட்டாணி,

காரட்,

குடமிளகாய்



அரைக்க வேண்டிய மசாலா

தனியா 3 தே.கரண்டி
மிளகு 2 தே.க
பூண்டு 2
சீரகம் 3 தே.க
பெருஞ்சீரகம்..2 தே.க

இவைகளை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் பயத்தம்பருப்பையும்,காய்கறிகளையும் தனித்தனியே வேக வைத்து எடுத்துக் கொண்டு,
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சீரகம் கொத்தமல்லி,கருவேப்பிலை இவற்றைத் தாளித்துக் கொண்டு ,அதில்
பயத்தம்பருப்பு,காய்கறிகளை ஒன்றாகப் போட்டு உப்பும் சேர்க்கவும் .

ஒரு கொதிக்குப்பிறகு அரைத்த மசாலாவையும் சேர்த்து வாசனை வந்ததும் இறக்க வேண்டியதுதான்.

மேலாப்புல பெருங்காயப் பொடி விருப்பமிருந்தால் தூவலாம்.
அத்தனையும் ஒன்றாக அரைத்து சூப்பாகவும் குடிக்கலாம்.






>

16 comments:

Subbiah Veerappan said...

ஸூக்கினி - என்ன காய் இது சகோதரி?
கேள்விப் படாத பெயராக இருக்கிறதே (பூசணீயா?)

G.Ragavan said...

வடக்கத்திச் சமையல்ல சீரகம் கொஞ்சம் தூக்கலா இருக்கும். அதுதான் அவங்களோட ஸ்பெஷாலிட்டி. இது லேசாத்தான் இருக்கு. ஸூக்கினின்னா என்ன? அதையும் சொல்லுங்க.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சார்,
சுக்கினி நம்ம ஊரு சுரைக்காய் மாதிரி இருக்கு. ஆனால் நல்ல பச்சைக் கலர்.
வெள்ளரிக்காய் வடிவத்தில இருந்ததால எடுத்து வந்தேன். பார்த்தால் ஸுக்கினின் மருமகள் சொன்னாங்க. இதுவும் நல்லாத்தான் இருக்கு. நம்ம ஊரில கிடைக்கிறதா தெரியலை.

வல்லிசிம்ஹன் said...

சுக்கினி பச்சைக்கலரில வெள்ளரி மாதிரிக் கோடில்லாம இருக்கு.
அரிந்தால் சுரைக்காய் மாதிரியும் இருக்கு. கூட்டுக்கு ஏத்த குணம்.

வயிற்றுக்கு ஏத்த காய். அஜீரணமாகாது. இந்தக் காய்கறிகளை சேர்த்து அரைத்துச் சூப் மாதிரி சாப்பிடவும் நன்றாக இருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தொப்பையக்கரைக்குமாமே ஸூக்கினி...
இங்கே எல்லா ஹிந்த்க்காரங்களும் வாங்குவாங்க 6 7 ன்னு வாங்கிட்டுப்போவாங்க..

உடம்பு சரியில்லாதவங்க கூட அதான் சாப்பிட்டா நல்லதா...ஆனா குழந்தைங்க பிமாரி* சப்ஜின்னு சாப்பிடாதுங்க.

(பிமாரி-illness)

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திரம் வந்துடுச்சா இங்கே. வரணும் முத்துலட்சுமி.
ஓஹோ நம்ம சாத்துகுடிய அப்படித்தானே சொல்வோம். ஜுரம் வந்த குடிக்கிற ஜூஸ்னு.
அது போல பிமாரி சப்ஜியா.
சரியாப் போச்சு.
உடம்பு இளைக்குமா. தெரியாமப் போச்சே. முன்னமேயே சாப்பிடாமேப் போனேனே.:))

Geetha Sambasivam said...

வர வர சமையலிலேயும் வெளுத்துக் கட்டறீங்களே! நம்ம ஊர் பொரித்த கூட்டு டைப் மாதிரித் தான் எனக்குத் தெரியுது, என்ன, கொஞ்சம் மிளகு அதிகமா வைக்கச் சொல்றீங்க, 2 தேக்கரண்டி மிளகுன்னா காரம் கொஞ்சம் எங்களுக்கு அதிகமா இருக்கும்.

துளசி கோபால் said...

இந்த zucchiniக்கு எங்க பக்கத்துலே courgetteன்னு பேர். இதுலே இந்த tt
சைலண்ட் வேற:-))))( ச்சும்மா இருக்கமாட்டானே இந்த வெள்ளைக்காரன்! சொல்லக்கூடாது,
சைலண்டா இருக்கணுமுன்னா ஏன் சேர்த்துக்கணும்?)

அது இருக்கட்டும். இது மஞ்சள் கலரிலும் கிடைக்கும். எந்தவிதமான சுவையும் இல்லாம ச்சும்மா
'சப்'னு இருக்கும். Stir Fry லே போட்டு வதக்குனா அரை நிமிஷத்துலே வெந்துரும்.

சாம்பார்லே போட்டா............ ரொம்ப சுமார்தான்.

என்னதான் வடக்கே சீரகம் அதிகம் சேர்ப்பாங்கன்னு சொன்னாலும், 3 தேக்கரண்டி ரொம்பவே
ஜாஸ்திப்பா. கொஞ்சம் பார்த்துப் போடுங்க.

ஆமாம், சமையலில் கடுகு சேர்க்கறது தென்னிந்தியர்கள் மட்டுமா?

வல்லிசிம்ஹன் said...

அதேதான் கீதா. பொரிச்ச கூட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது.

இதில சோம்பு வேற சேர்க்கிறாங்க. ஆனால் வறுத்தபிறகு நல்ல வாசனையா இருந்தது.

எல்லாக் காய்கறிகளைய்ம் சேர்க்கும்போது காரம் சமனாகிவிடுகிறது.

இதை ஒரு டிபன் மாதிரியே அவங்க சாப்பிடறாங்க.
கார்லிக் ப்ரெட் ஸ்டிக் ஐ, டிப் செய்து சாப்பிடறது வழக்கமாஇருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி,
அதானே, இதைப் போய் சௌ சௌ மாதிரி வதக்கி, 4 சுக்கினி திருத்தி இலுப்பச்சட்டில போட்டுட்டு ,சின்னவனுக்குப் பால் கரைச்சுக் கொடுத்துட்டு வரத்துக்குள்ள அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.

பெரியவன் ஆர் யூ மேகிங் சம்திங் ஸ்வீட் பாட்டி?னு கேட்டதும்தான் ,பார்த்தேன்.அப்படியே வாசனை. பழுப்பாகிவிட்டது.

அன்னிக்கே தீர்மானம் பண்ணிட்டேன்.இந்தக் காயை மத்தக் காய்கறிகளோடத் தான் கூட்டு சேர்க்கணும்னு.
சீரகம் அதிகமா.
கொஞ்சம் குறைச்சுக்கலாமே:))

ramachandranusha(உஷா) said...

ஆமாம் வல்லிம்மா, இதுக்கூட பார்த்தேன், வெள்ளரிக்காய் போல இருக்கு ஆனா இல்லை, அதுப்போல தக்காளிகாய் போல இருக்கு, அது த.காய் இல்லை. கோவைக்காய் போல இருக்கு, ஆனா இல்லை. இப்படி நாலஞ்சு பெயர் தெரியாத
காய்கள் இருக்கு, செஞ்சிப் பார்த்துவிட வேண்டியதுதான்.
நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், சமையலுக்கு என்று ஒரு கூட்டு வலைப்பதிவு ஆரம்பிங்கன்னு, ஜீரா, மதியைத் தேடிக்கிட்டு இருக்கேன். படங்களுடன், சரியான அளவு மற்றும் மைக்ரோ வேவ்விலும் செய்யும் முறையுடன்,

ambi said...

இதோ இந்த வீக் எண்டுல செஞ்சு பாக்கரேன். :)

ஹிஹி, ஸாரி, உளறிட்டேன், செஞ்சு தர முடியுமா?னு தங்கமணிய கேட்டுக்கறேன். :p

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பி, அதென்னது தங்கமணியைக் கூப்பிடறது.
நீங்க செய்து பழகணும்.
உண்மையாச் சொல்றேன் அம்பி. சமியல் மட்டும் கைவந்துட்டால் உங்களை யாரும் பீட் பண்ணமுடியாது.

சேஞ்சு பார்த்துட்டு சொல்லுங்கோ. சண்டே சமையல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.

வல்லிசிம்ஹன் said...

உஷா, நீங்களும் செய்தீங்களா.

இங்க கிடைக்கிறதை வச்சுத்தானே மாஜிக் பண்ணனும்.

எல்லாக் காய்கறி கூடவும் எதையாவது அரைச்சுக்கொட்ட வேண்டி இருக்கு.
கூட்டுப் பதிவா. நல்லா இருக்குமே. புதிசு புதிசாப் பார்க்கலாம்,அதுவும் மைக்ரோவேவ் அப்படின்னா எல்லாச் சின்னதுகளும் பார்க்கும்.

நானானி said...

வல்லி!
என் சமையலில் இதுக்கு பேர்
சீனியர் சிட்டிசன் டிஷ். நானும் ரங்கமணியும் சப்பாத்திக்கு விரும்பி
தொட்டுக்கொள்வது.
சுக்கினி மஞ்சள் நிறத்திலும் மற்றும்
டிஸ்க் வடிவிலும் கிடைக்கும். வெறுமே கூட சாப்பிடலாம்.சேஃப்வே
போகும் போது பார்க்காத என்னவென்று தெரியாத காய்கறிகளாக
வாங்கிவந்து பரிசோதனை செய்வேன்.
நன்றாகவேயிருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, சீனியரானாலே கொழுப்புக் குறைஞ்சுடுது இல்லையா.

இன்னும் பதமாகணும்னுதான் இப்படியெல்லாம் சாப்பிட வேண்டி வரது.
ரொம்ப நன்றி. உங்களுக்குத் தெரிஞ்ச காய்கறி விஷயம் நீங்களும் எழுதுங்களேன்.