Blog Archive

Thursday, July 24, 2008

கிளம்பியாச்சு எக்ஸ்ப்ரஸ்:)

இது ஸ்விஸ்.





இது துபாய். இது சென்னை.
துபாயை விட்டுக் கிளம்பும் நேரமும் வந்தாச்சு.
பாப்பாவை விட்டு விட்டு ஊருக்குப் போகணுமே என்கிற வருத்தம்.
என்னவோ நானே பெற்ற பெண்ணென்று நினைப்பு. அவளுடைய(பேத்தி)
அம்மாவிடம் ஏகப்பட்ட புத்திமதி சொல்லி விட்டு பொட்டிகள் நாலையும் கைப்பெட்டிகள் ரெண்டையும் தூக்கிப் போட்டுக் கொண்டு,
விமான நிலையத்துக்கு விரைந்தோம். பெரியவன் முடிந்தவரை அறிவுரைகள் சொல்லியபடி வந்தான். எங்க நடந்தாலும் பார்த்து நடம்மா. ஸ்பெஷலா இந்த எலிவேட்டெர், ஓடற வேகத்தில பொட்டி தடுக்கி விழ வாய்ப்பு இருக்கு....இப்படி அவன் சொல்லச் சொல்ல தூக்கக் கலக்கத்தில் மண்டையை
சரி சரி என்று ஆட்டியபடியே வந்துவிட்டேன்.
இமிக்ரேஷன் வந்தாச்சு தலை ஆட்டறதை நிறுத்திட்டு, அவனுக்கு பைபை சொல்லு என்று சிங்கத்தின் குரல் கேட்டது. அடப்பாவமே தகாப்பன் சாஅமி ரோல் எடுத்துண்டவனுக்கு வரேன்பா ன்னு கூட சொல்லலீயே என்றூ வேகமாக யாரையோ பார்த்து கையசைத்து விட்டு,
ட்யூட்டி ஃப்ரீ ஷாப்பிங் ஏரியா வந்ததும் கால்கள் தாமாக நின்றன. இவர் தனக்கு வ்வேண்டும் எகிறதை வாங்குவதாகச் சொல்லி எங்கேயும் பார்த்துக் கூட்டத்தில தொலைஞ்சுடாதேனு அருமைய சொல்லி விட்டு அடுத்த கடைக்குப் ஓனார். நானும் தங்கம் விற்கும் கடை பக்கம் கண்ணால் மேய்ந்தூவிட்டுத் திரும்பும்போது வேகமாக ஓடின ஜப்பான்காராரோட பெட்டியும் என் பெட்டியும் சந்தித்துக் கொள்ள, ஒரே இடத்தில தயாரான பாசமோ என்னவோ!!
அடுத்த வினாடி நான் கீழே.அடச்சே என்று ஆகி விட்டது.
இப்படிக்கூடவா ஒரு முழங்கால் சதி செய்யும்???
பத்தாயிரம் பேர் நடமாடுகிற இடத்தில் ஒரு வயசான அம்மா விழுந்தால் என்ன நடக்குமோ அத்தனையும் நடந்தது.:)
அடி ஒண்ணும் இல்லை கோபம்தான் எனக்கு, அந்த ஆளை நாலு நல்ல வார்த்தையினால் திட்டலாம் என்றால் அவன் ஜாக்கிச்சான் ரேஞ்சில் படிகளி நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
இந்தக் கூத்து போறாது என்று ,அடுத்த கடையில் சிங்கத்தையும் காணவில்லை.
பகீர்னு பயம். வலி கூடத்தெரியவில்லை. ஸ்விஸ் ஏர் போர்டிங் அனௌன்ஸ்மெந்த் வர ஆரம்பித்தது.
சிங்கத்தை மொபைலில் கூப்பிடலாம் என்றால் என்னிடம் மொபைல் இல்லை.
வழியோடு போய்க்கொண்டிருந்த ஒரு சமர்த்தாகத் தெரிந்த பையனிடம் அப்பா
என் பையனிடம் பேச வேண்டும், உன் கைபேசி கொடுக்கிறாயா என்று கேட்டதுக்கு அவன் பயந்து ஓடி விட்டான்.
இப்படியும் நடக்குமா கடவுளே, ஆஸ்போர்ட் டிக்கட் எல்லாம் அவர் கையில் இருக்கு எங்அ போனார்னு தெரியலையே, ஆஞ்சனேயா என் ராமனை நீதான் தேடணுமென்று புலம்பிய படி
மேலே போகும் எஸ்கலேட்டரில் ஏறி அங்க டிபார்ச்சர் கேட்டில் என்னைத் தேடுகிறாரோ என்று போஒனேன்பா.
அங்க சத்தமாக ,அம்மாவைக் காணோம்பா. ஐ லாஸ்ட் ஹெர், ஒரே டென்ஷன்'' என்று சிங்கத்தின் குரல் கேட்டது.
நான் கையை ஒரு நரைத்த தலை தெரிந்த திக்கில் ஆட்டினாலும் அவர் என்னைப் பார்த்தால் தானே.
பேர் சொல்லிக் கூப்பிடவும் கூச்சம்.:)
திரிசூலம் கேஆர் விஜயா மாதிரி அழக் கூடத் தோன்றவில்லை.
என்னன்ங்கனு சொல்லப் பழக்கமும் இல்லை:)
சட்டென்று திருப்பிப் பார்த்து விட்டார்.
சட படன்னு கையையும் பொட்டியையும் இழுத்துக் கொண்டு கேட்டை நோக்கி விரைந்தார்.
பரிதாபமாக இருந்தது.
எப்படியொ ஸ்பெஷல் வாயில் வழியாக அந்த ஸ்விஸ் செக்யூரிடி எங்களை பிளேன் வரை போஒகும் பஸ்ஸில் ஏற்றீ விட்டார்.
ஏற்கனவே வந்து விட்டவர்கள் எங்களைக் கொஞ்சம் வினோதமாகப் பார்க்க,
நாங்களும் எங்கள் இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம்.
இனிமே என் கண்ணை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகாதே என்று ஒரு கச்சிதமா சொல்லிவிட்டு இவர் ஆழ்னிலைத் தியனத்தில் இறங்கி விட்டார்.
அப்புறம் பார்த்தால் இன்னும் பத்துப் பேர்கள் எங்களை விட தாமதமாக வந்து கோண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் என்னைத் தடுக்கியவர்:)




17 comments:

ராஜ நடராஜன் said...

நான் முதல் பின்னூட்டமா:)

NewBee said...

வல்லிமா,

நலமா? :))

//அவர்களில் ஒருவர் என்னைத் தடுக்கியவர்:)
//

:-)))), உங்கள வேகமா கடந்து போய், 'படு வேகமா' நடந்து வந்துட்டாராக்கும்????????

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜ நாராயணன். ஆமாம் நீங்க தான் ஃபர்ஸ்ட்:)

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.......

இனிக்குக் காலையில் படிச்ச முதல் பதிவு.


சிரிச்சுச் சிரிச்சு.......

சரி. பத்திரமா இருங்க. கால்வலி தேவலையா?

வல்லிசிம்ஹன் said...

ஓ.நலமே.நீங்க எப்படி இருக்கீங்க. கோடை மழை ஓய்ந்ததா.

ஆமாம் அதே ஜப்பான்காரர் ரெண்டு கையிலேயும் பைகளில் ஏகப்பட்ட பொருட்களோடு ஓடி வந்தார்:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பேர் சொல்லிக் கூப்பிடவும் கூச்சம்.:)
//

பொய்! பொய்!
உண்மையைச் சொல்லக் கூச்சம்-னு சொல்லுங்க!
ஹா ஹா ஹா

Welcome Back, Valliamma!

வல்லிசிம்ஹன் said...

துளசீ, நேரம்பா. நேரம்:)
கால்வலி போச்சு. அடுத்தாப்பில அம்மா தொலைன்ஞ்சு போயிடுவாடா, ஒரு கண்ணு வச்சுக்கோனு சொல்ல இவருக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது பாரு. அதான் சங்கடம்:)

வல்லிசிம்ஹன் said...

ரவி, உண்மையெல்லாம் வெளில இப்படியா விடுவாங்க:)

அதுவும் ஏர்போர்ட்ட்டில் கத்த முடியுமா. இதுக்குத்தான் ஒரு குடும்பப் பாட்டு தயார் பண்ணிக் கொண்டு இருக்கொம்.....தாயாருக்காக.

ராமலக்ஷ்மி said...

கால் வலி போச்சுன்னு சொல்லிட்டீங்க. இனி பத்திரமா போங்க.மோதியவனை அல்லவா சொல்லணும். கடைசி வரி நச். உலகச் ரொம்பச் சின்னதுதான். திரும்ப உங்களைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்காவிட்டாலும் முதத்துல ஒரு தர்ம சங்கடமாவது இருந்ததா அந்த ஜப்பான்காரருக்கு?

குடும்பப் பாட்டா :)? அதுக்கான தேவையெல்லாம் இருக்க வேண்டாம்.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

ஏதோ நாங்களும் ஏர்போர்ட்ல நடமாடற மாதிரி அப்படி ஒரு விவரிப்பு, விறுவிறுப்பு ... சூப்பர்.

//அடுத்தாப்பில அம்மா தொலைன்ஞ்சு போயிடுவாடா, ஒரு கண்ணு வச்சுக்கோனு சொல்ல இவருக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது பாரு. அதான் சங்கடம்:)//

இது அத எல்லாம் விட சூப்பர் ... :)))

வல்லிசிம்ஹன் said...

அதான் எனக்கு அதிசயமா இருந்ததும்மா ராமலக்ஷ்மி.
வருத்தமே இல்லம்மா.
அவங்க எல்லாம் மரியாதைக்குப் பேர் போனவங்களாச்சே:((

ச்சும்மா குடும்பத்தில பாடறது நான் ஒருத்திதான். அதனால ஓ வசந்தராஜான்னு பாட்டுப் பாட வேண்டியதுதான்:)))நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

சதங்கா, வரணும்பா. உண்மையா நடக்கிறதை எழுதும்போது சுவை கூடி விடுகிறது.

பயமாப் போச்சு அன்னிக்கு ராத்திரி.
எல்லாம் கம்யூனிகேஷன் பிரச்சினை தான்.:)

கோபிநாத் said...

வல்லிம்மா...வாங்க...;))

கடைசி வரியை படிக்கும் போது...வடிவேலு சொல்ற மாதிரி எல்லாம் ஒரு கூட்டமாதான் இருந்திங்க போல!! ;))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோபி, கூட்டம்தான். சுவிட்சர்லாந்துக்குப் போகிறவங்கள்ள அவங்கதான் முதலிடமாம். நாம இரண்டாவது இடம்.
வடிவேலு சொல்ற மாதிரியே வந்துட்டோம்ல.:)

Geetha Sambasivam said...

sari valli,
குடும்பப் பாட்டு தயாராயிடுச்சா?? நீங்களாவது தைரியமா, நிஜமாவே தைரியமா எஸ்கலேட்டரில் ஏறிப் போயிட்டீங்க, நம்மளாலே அந்த எஸ்கலேட்டரில் எல்லாம் ஏற முடியாது. ஆகவே கூடவே நானும் போயிடுவேன், ஷாப்பிங்காவது, ஒண்ணாவது! அதெல்லாம் வேண்டாம்னு தரதரனு இழுத்துட்டுப் போகவேண்டாமோ??? :)))))))

கோவை விஜய் said...

நடந்ததை நேரில் பார்த்ததுபோல் இருந்தது.


தனியங்கி படிக்கட்டுகளில் இதுவெல்லம் சகஜம்தானே.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

வல்லிசிம்ஹன் said...

கீதா,
இத்தனைக்கும் துபாய் நிறையப் போயிட்டு வந்தாச்சு. இருந்தாலும் ஃப்ளைட் பிடிக்கிற வேகம். பயம். இருவருக்கும்வயசாகி விட்டது. ராத்திரி 12 மணிக்கு முழித்துக் கொண்டு வண்டி ஏறுகிற விஷயமெல்லாம் சிரமம்தான்.