About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, October 07, 2014

கிருஷ்ண லீலா:)''போன உடணே ஷேய்ல உக்காயணும். அப்பா மடில.
சலோன் லேடி தலைல சில் சில் மயுந்து போடுவா.
கியுக் கியுக்னு சிஸர்ஸ் வச்சு ஹேய் எல்லாம் ஸ்னிப் செய்து, கண்ணு குத்தாம கட் செய்துடுவா''
யாக்கெட் தயுவா. எல்மோ தயுவா''
இவ்வளவு வீர வசனங்கள் பேசிய சின்னவன் நேற்று தலைமுடி சீர்திருத்தம் செய்ய, குழந்தைகளுக்கான இ ஸ்னிப்ஸ் என்ற கடைக்குள் நுழைந்ததிலிருந்து
மெல்ல சிணுங்கலோடு ஆரம்பித்த ஆலபனையை,
கேவிக் கேவி அழுது,
முழு கச்சேரியாகச் செய்து,
அம்மா அப்பா கைகளையும் மீறி, தேமேனு ரொம்பப் பொறுமையாக அவனது தலை முடியைச் சீர் செய்தவர்களையும் தள்ளி அமர்க்களப் படுத்தி இருக்கிறான்.

எங்க பெண் மாப்பிள்ளை இருவரும் வீட்டிலியே
தலைமுடியைச் சீர் செய்யும் கலையை ஒழுங்காகக் கற்றுக் கொள்ளப் போகிறார்களம்:)
இதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனோடு வெப்காமிராவில் பேசக் கூப்பிட்டபோது, அழகாக வந்து உட்கார்ந்து கொண்டு தலையை எலா ஆங்கிளிலும் காண்பித்தான். அடச் சம்த்தே ஹேர்கட் பண்ணிக் கொண்டாயா என்று நான் பெருமிதப் பட,
அவன் தான் அழுத கதையெல்லாம் நடித்துக் காட்டிச் சிரிக்கிறான்.
அவன் அம்மா அப்பாதான் இந்த கலாட்டாவிலிருந்து இன்னும் மீளவில்லை:)
பி.கு. அவனுக்கு மற்ற மழலையெல்லாம் தெளிந்தாலும் இன்னும் ர னா மட்டும் வரவில்லை.
லெக்டாங்கிள்...ரெக்டாங்கிள்
ஸ்குவீ...ஸ்குவேர்.
டாலகன்...ட்ரையாங்கிள்
தன் பேர் கிஷா. ..கிருஷ்ணா.
பின்
திருத்தங்கள்.!!!!
ஷேயர்...சேர்..நாற்காலி
மயுந்து...மருந்து..லோஷன்.
கிருஷ்ணாவுக்காக ,வாசுதேவன் சொன்ன மாற்றம்.:)
கிஷாவுக்கு மழலை அழகு.
பாட்டி எழுதும்போது நல்ல தமிழ் வந்துவிட்டது. அதனால மீண்டும் எடிட் செய்தேன்!!!
சயியா தி.வாசுதேவன் சார்??

எல்லோருக்கும் தைத்திரு நாள் வாழ்த்துகள்.Posted by Picasa

21 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.....:-))))))

இப்போ என் கவலை எல்லாம் எப்படி 'ராரா' பாடப் போறானோன்னு இருக்கு!

முன்பொருகால எதிர்வீட்டுக் கிருஷ்ணனுக்கு 'ச'வே வராது.
பீப்பு, போப்பு, பாம்பார், பட்டை இப்படி:-))))

இலவசக்கொத்தனார் said...

:)) நல்ல கதையா இலுக்கே. ச்சீ, இருக்கே!! :)

திவா said...

அது சரி!
//சேர்ல//
இது மட்டும் எப்படி வந்துது, அக்கா??
மழலை இன்பம்!
பொங்கல் வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

என் தங்கை பெண்ணுக்கும் ரொம்ப நாள் ”ர” வராது. ’ல’ தான். அம்மா பேரு ‘சுண்டெலி’ என்பாள் ’சுந்தரி’யை:)!

பொங்கல் வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

துளசி, அவன் ராரா கண்டிப்பா யாயாஅனு தான் பாடுவான்.
சில இடங்கள்ள அனாயாசமா ஆர் வாயில வருது.

அவனோட மாமனும் ர னா வை ட வாக்குவான். இவன் யா ஆக்குகிறான். நமக்குப் புரியலைன்னா அதுக்குத் தனி கோபம் வேற.:)
அது யாரு எதிர்த்த வீட்டுக் கிருஷ்ணன்!!!!

இன்னோரு கதை ரெடி!!!!

வல்லிசிம்ஹன் said...

வாங்க கொத்ஸ்.

இன்னும் கொஞ்ச நாட்கள் போனா மழலையெல்லாம் மாறிடும்ம்.
இந்த நாட்கள் இனிய நாட்கள். :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வாசுதேவன்.:)

கிரிஷ்ணா பேசும்போது மழலை. அதை அக்கா எழுதினா,
காது கேட்டதைக் கைவிரல்கள் நல்ல தமிழா டைப் செய்துடுத்தும்மா. மாத்திட்டேனே:)

வல்லிசிம்ஹன் said...

அட ராமா. அம்மாவைச் சுண்டெலியாக்கின முதல் மகன் இவன்தானாய் இருக்கும்.

குழந்தைகள் உலகம் !!


ராமலக்ஷ்மி இப்ப சொற்கள் சரியாகி இருக்கும் இல்ல;)))

திவா said...

//இன்னும் கொஞ்ச நாட்கள் போனா மழலையெல்லாம் மாறிடும்ம்.
இந்த நாட்கள் இனிய நாட்கள். :) //

ஆமாம். சுமார் 2 வருஷம். அதுவரை என்ஜாய்!

// காது கேட்டதைக் கைவிரல்கள் நல்ல தமிழா டைப் செய்துடுத்தும்மா. மாத்திட்டேனே:) //
:-))
மறந்துகூட தப்பா வராது போல இருக்கு!

நானானி said...

மழலையமுதம் தின்னத்தின்ன திகட்டாது. அப்படியே பொத்திப் பாதுகாத்து வையுங்கள்...வல்லி! ஏன்னா..? இது போனா வராது பொழுது போனா கிடைக்காது.

கோபிநாத் said...

உங்களுக்கும் தைத்திரு நாள் வாழ்த்துகள் அம்மா ;)))

மழலை பேச்சை ரசித்தேன்...என்ஜாய் ;))

கீதா சாம்பசிவம் said...

இனிமை! குழந்தைகள் பேச்சைக் கேட்டு அனுபவிக்கவும் கொடுத்து வச்சிருக்கணும். இனிய பொங்கல் வாழ்த்துகள் வல்லி, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.

நேத்திக்குத் திறக்கவே இல்லை உங்க பதிவு, ரொம்ப நேரமும் எடுக்குது எனக்கு! :(

சந்தனமுல்லை said...

ஆகா..வல்லியம்மா..இந்த இனிப்பை எப்படி மிஸ் செய்தேன் நான்?!! ஹ்ம்ம்..

பதிவும் குட்டியின் மழலையும், சேட்டையும் சூப்பர்!

//டாலகன்...ட்ரையாங்கிள்// செம!! :-)
குட்டிக்கு வாழ்த்துகள்!

ஆதவா said...

அவ்வளவாக புரியாவிட்டாலும் குழந்தை மொழியை அகப்படுத்தியது அருமை..

வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

என் மைத்துனன் மகன் இப்படித்தான் பேசுவான். அவன் பெயர் சௌலிலாஜன்! என்னிடம் வந்து 'பெலிம்மா, எனக்கு கொலங்கு கத சொல்லுங்கோ' என்பான்.
இந்த மழலை இன்பம் ரசிக்க ரசிக்க பேரானந்தம் தான்.
சொல்ல மறந்துட்டேனே! என் பிள்ளைக்கும் 'ர' வலாது. ஸாரி, ஸாரி வராது. நான் 'லஞ்சனி' அவன் அப்பா 'நாலாயணன்' அண்ணா நகல்ல பெலிய்ய டவல் இருக்குமே!

நானும் உங்களைப்போல இந்த மழலையை லொம்ப ரசித்திருக்கிறேன்.

உங்கள் பதிவை பலமுறை படித்து சிரித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,வருகைக்கு மிக நன்றி மா. பேரனுக்கு இப்பதான் ர னா வருகிறது ,.எட்டாகப் போகிறதே. இங்க இருக்கிறவனுக்கு தவறிக்கூட மழலை இல்லை. கணிர்ர் குரல் தாத்தா மாதிரி. உங்க மைத்துனர் பையன் இன்னும் சுவையாகப் பேசி இருக்கிறான். இந்த ப் பேச்சுச் சுவைக்கு எது வேணுமானாலும் விலை கொடுக்கலாம்.

Sasi Kala said...

மழலை படிக்கும் போதும் சுகம் தான் !!!!!
கண்ணனின் முதல் படம் அழகோ அழகு .

Geetha Sambasivam said...

காலம்பரத் தான் அப்புட்டேப் பேசினேன். இப்போ நல்லாப் பேசறா! அவ மழலை இன்னமும் மனசை விட்டுப் போகலை. ஐ ப்ராமிஸ் னு சொல்ல வராது. ஐ தாமஸ்னு சொல்லுவா! அவ அம்மா கோவிச்சுண்டா தோந்த் ஷவுத் மம்மி என்பாள். :)))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி சசிகலா. கிருஷ்ணன் எங்க இருந்தலும் எப்படி இருந்தாலும் அழகு.இந்தப் படம் கூடவே அழகு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. இந்த மழலையெல்லாம் ரெகார்ட் செய்யாம விட்டோமேன்னு தோணும். நம் குழந்தைகள் மழலைகூட மறந்து விடுகிறது.பேரன் பேத்திகள் மறப்பதில்லை.

கோமதி அரசு said...

மழலை இனிமை.