Blog Archive

Saturday, April 01, 2017

1200, Naachiyaar.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 12 வருடங்களுக்கு முன்  மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன்.
அதுவும் ஒரு ஏப்ரில் மாதம். என்னுடன் எழுதியவர்கள் அனைவரும் எத்தனையோ சாதித்து ,இன்னும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என் அன்புத் தோழிகள் துளசி கோபால்,கீதா சாம்பசிவம் ,கோமதி அரசு, கலா ஸ்ரீராம். 

சமகால எழுத்தாளர்கள். என் எழுத்துக்கு உரம் இட்டவர்கள்.
எனக்கு முன்பிருந்து எழுதத் துவங்கி ஓயாமல் உழைப்பவர்கள். 

அப்பொழுது இருந்த இணைய தளங்கள் எல்லாமே 
நன்றாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பத்திரிக்கையில் எழுதிக் கொண்டிருந்த பலரும் 
இணையத்திலும் இருந்தது எனக்கு மிகப் பெரிய
ஆச்சர்யமும்,சந்தோஷமும் கொடுத்தது.

பல போட்டிகள், பல தொடர்கள்,பல அழைப்புகள் 
எழுதுவதற்கான  சந்தர்ப்பங்கள்,சந்திப்புகள் இப்படி எத்தனையோ  என்
சிறிய  மனஓட்டத்தை விரிவு படுத்தின.
 சில நண்பர்கள் இப்போது இல்லை.
மற்றவர்கள்  எப்போதும் போல் என்னுடன்
நட்புடனே, ஆதரவாக என் துன்ப வேளையில்
தூணாக இருந்து கொண்டு
என் சுணக்கத்திலிருந்து விடுவித்தவர்கள்.
அத்தனை நல் இதயங்களையும் இங்கே எழுதக் கூட இப்போது
எழுத வலுவில்லை.
என் மனம்  எதையும் மறக்கவில்லை. மீண்டும் சுறுசுறுப்பாக
இயங்க இறைவனை வேண்டுகிறேன்.
அனைவருக்கும் என் நன்றி. வாழ்க வளமுடன்.

8 comments:

ஸ்ரீராம். said...

சுறுசுறுப்பாக மீண்டு(ம்) வாருங்கள். உங்களால் முடியும்.

ஹூம்.. இந்த கமெண்ட்டும் எங்கே போகப்போகுதோ! வருமோ வராதோ! ஒவ்வொரு பதிவுக்கும் கமெண்ட் இட்டு வருகிறேன். என் கமெண்ட்ஸ் மட்டும் காணாமல் போகுதே...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,இப்பொழுது தான் ஒவ்வொரு பின்னூட்டமாகப் பார்த்து வருகிறேன்.
இதைப் போல ஆனதில்லை.இனிமேல் கவனமாக இருக்கிறேன் மா. மிக நன்றி.

'பரிவை' சே.குமார் said...

மீண்டும் வாருங்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...

Anuprem said...

1200 பதிவுகள்....மிகவும் அருமை... வாழ்த்துக்கள் அம்மா..


உடல், மன நலத்துடன் மேலும் பல பல செய்திகளையும் , அனுபவங்களையும் பகிர கண்டிப்பாக இறைவன் அருள் புரிவார்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார்,
சில நாட்கள் துடிப்புடன் ஆரம்பிக்கின்றன.
சில நேரம் வேறு மாதிரி.
ஆனால் எழுதுவதை விடக்கூடாது.
அது நமக்கு வடிகால்.
மிக நன்றி அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா பிரேம்குமார், மிக நன்றி.
1200 எல்லாம் ஒரு கணக்கே இல்லை. என் தோழிகள்
எல்லாம் 4000,5000 பதிவுகளைத் தாண்டியவர்கள்.
தொடர்ந்து எழுத இறை அருளட்டும்.

Geetha Sambasivam said...

முகநூலில் படிச்சேன். வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் அனுபவப் பகிர்வு எங்களுக்குத் தேவை.

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பதிவை எழுதும்போது சிரித்துக்கொண்டேன். உங்களைப் போல ,துளசி மாதிரி
இனி யார் எழுதுவார்கள். நன்றி மா.