Blog Archive

Saturday, May 12, 2018

அன்பு முரளி இரண்டாம் பாகம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

          தம்பி முரளியும் அவன் வெள்ளை சட்டையும்
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 திருமங்கலம் 1956.

நானும் தம்பி முரளியும் முறையே மூன்றாம், இரண்டாம்
வகுப்பில் ,கஸ்தூரிபாய் காந்தி ஆதாரப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம்.

சலவைத் தொழிலாளி வீட்டுக்கு வந்து அப்பாவின் வேட்டிகள்,சட்டைகள், படுக்கை விரிப்புகளை மட்டும் எடுத்துப் போவார். ஒரே ஒரு தடவை தம்பியின்
வெள்ளை சட்டையை ,ஏதோ கறை நீக்க அவ்ரிடம் அம்மா
கொடுத்துவிட்டார்.
தம்பிக்கு மிகப் பிடித்த சட்டை.
சட்டை வந்துடுத்தாம்மான்னு கேட்டுக் கொண்டே இருப்பான்.

ஒரு வாரத்தில் கொடுப்பார்.அதில அழகா ஓரமா புள்ளி வச்சிருக்கும் பாரு
என்று சமாதானப் படுத்துவார் அம்மா.
அடுத்த நாள், அவனுடைய தோழனே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டுவந்தான்.
அவ்வளவுதான் இவனுக்கு ஒரே கலக்கம். என் சட்டையைக் கொடு  என்று அவன் பின்னாலியே சுத்தவும், பள்ளியை விட்டு ஓட ஆரம்பித்துவிட்டான் அவன்.
அவன் ஓட ,இவன் ஓட, இவன் பின்னால் நான் ஓட
 ஒரே குழப்பம். முரளி அந்தப் பையனை விடுவதாக இல்லை.
இரண்டு பர்லாங்க் போயிருப்போம். அங்கே போய் நின்ற பையனின்
வீட்டிலிருந்து வெளியே வந்தார் நம் சலவை செய்பவர்.
என்ன சாமி இங்க வந்திருக்கீங்க என்று வாஞ்சையோடு கேட்டவர்
தன் மகனையும் பார்த்தார். புரிந்துவிட்டது.

அடிக்கப் போனவரிடம் ,மனைவி வந்து தடுத்தார்.
நான் தான் போட்டுவிட்டேன். நீ அவனை அடிக்காதே.
என்றதும் அவர்,
என்னிடம்  நீங்க போங்க சாமி, நான் சட்டையைத் தோய்ச்சுக் கொண்டு வரேன்,
என்றார்.
இவனோ நகர மாட்டேன் என்கிறான். நல்ல வேளையக அங்கே எங்கள் தெருவிற்குத் தேங்காய் மிட்டாய்  கொண்டு வருபவர்
பஞ்சு மிட்டாய்க் கொண்டு வரவும்,
அம்மா கொடுத்த பத்து பைசா..என்னிடம் இருந்ததனால் ,ஒரு குச்சி வாங்கி இவன் கையில்
கொடுத்துக் கவனத்தைத் திருப்பி
வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
அம்மாவுக்கு ஒரே பெருமையும் சிரிப்பும்.
எனக்கு கோபம். அப்படியே ஓடறான் மா தெருவில. மாட்டு வண்டி வந்தால் என்ன செய்யறது.
பஞ்சு மிட்டாயை அவனுக்குக் கொடுத்துட்டேன்.
எனக்கும் வேணும்மா என்றதும் அம்மா சமாதானப் படுத்தினார். வாங்கிக் கொடுத்தார்.

 மிகவும் மன்னிப்புக் கேட்டபடி வந்த சலவைக்காரரிடம்
சட்டையை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,
முரளிக்கு வேற ஒரு வெள்ளை புஷ் ஷர்ட் வாங்கினது இன்னோரு கதை.

அப்பா எனக்கும் அவனுக்கும் ட்ராக்கர்ஸ் என்று பெயர் வைத்தார்.

1992 ல  42 வயதில் அவன் பைபாஸ் செய்து கொண்ட போது அவனை சிரிக்க வைக்க நான்
 சொன்ன சம்பவங்களில் இதுவும் ஒன்று

12 comments:

KILLERGEE Devakottai said...

நினைவுகள் தொடரட்டும்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு நண்பர்களுக்கு,
இந்தப் பதிவு மீள் பதிவு. எனக்கு ஒரு தொடர்ச்சி வேண்டும் என்பதற்காக
அவனுடைய வயது வாரியாக எழுதுகிறேன்.
அதனால் நீங்கள் படித்துப் பின்னூட்டம் இட சிரமப்படவேண்டாம்.

அடுத்த பதிவு அவனுடைய பத்துவயதுக்கான எழுத்தாக இருக்கும்.
மன்னிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டையாருக்கு மிக நன்றி.

Yaathoramani.blogspot.com said...

இது நான் படிக்காத பதிவு என்பதால் புதிதாகக் கருதியே படிக்கிறேன் மேலும் நான் திருமங்கலம் தொடர்புள்ளவன் ஆதலால் எழுத்து காட்சிப் படிமங்களாகவே விரிவது கூடுதல் அனுகூலம்

ஸ்ரீராம். said...

ஆமாம் அம்மா.. இப்போதுதான் படித்த மாதிரி இருக்கிறதே என்று பார்த்தேன்.

Geetha Sambasivam said...

எனக்கும் என்னுடைய புடைவை விஷயத்தில் சமீபத்தில் இதே அனுபவம் எற்பட்டது. புடைவையை அந்த இஸ்திரி போடும் பெண் கிட்டேயே கொடுத்துட்டேன். :)

நெல்லைத் தமிழன் said...

இதை முன்பே எழுதியிருக்கிறீர்களே.... தம்பியின் நினைவுகள்தான் உங்களை மறக்கவிடாமல் செய்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

இது மீள் பதிவா? எங்களுக்குப் புது பதிவுதான். வல்லிம்மா.

தம்பியுடனான பாசம் மனதை நெகிழ வைக்கிறது வல்லிம்மா. அழகான நினைவுகள். எதுக்கு மன்னிப்பு என்றெல்லாம் வல்லிம்மா. நாங்கள் தொடர்கிறோம்.

துளசிதரன், கீதா

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு ரமணி. அருமையான பின்னூட்டத்துக்கு மிக நன்றி.
நீங்களும் மதுரை,திருமங்கலத்தைச் சேர்ந்தவரா. மிக மகிழ்ச்சி.
நாங்கள் 1960 அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

வல்லிசிம்ஹன் said...

அடப் பாவமே கீதா. சென்னை இஸ்திரிக்காரர்கள்
தான் காணாமல் போக்குவதில் வல்லவர்கள் என்று நினைத்தேன்.
உங்களுக்கும் இது போல நடந்திருக்கிறதே.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெ.தமிழன். மறக்கத்தான் முடியவில்லை.காலம் மாறும்.

வல்லிசிம்ஹன் said...

ஓ.. மிக நன்றி அன்பு துளசி , கீதா.
ஓவ்வொரு நிகழ்ச்சியாக மனதில் ஓடுகிறது.
நினைவு இருக்கும்போது பதிந்து விட நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன் மா.